எமது ஆன்மீகப் பணியகம்

எமது சமூகத்தின் வரலாறு, அருள்பணியாளர்கள், அருள்பணிப் பேரவை மற்றும் குருத்துவ இல்லம்.

நமது வரலாறு

எமது பணியகம் 1994 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 6ம் திகதி அருட்தந்தை செபமாலை துரம் அ.ம.தி அடிகளாரின் பொறுப்பேற்றலோடு Goncourt புனித சூசையப்பர் ஆலயத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம் பிக்கப்பட்டு ஆன்மீக செயற்பாடுகள் நடைபெற்று வந்தன.

பின்னர் அருட்தந்தை மரிய செபஸ்ரியன் அ.ம.தி அடிகளாரின் காலத்தில் அதாவது 1998 ஆம் ஆண்டு ஆனி மாதம் 28ம் திகதி 47 Rue de la Roquette 75011 Paris என்ற இடத்தில் அடுக்கு மாடி கட்டிட தொகுதியில் எம் பாவனைக்கு என்று ஒரு காரியாலயம் வழங்கப்பட்டது.

பின்னர் எமது செயற்பாடுகளையும் ஒத்துழைப்புக்களையும் உணர்ந்த பாரீஸ் மறை மாவட்ட ஆயர் அவர்கள் மண்டபம் பணிமனைகளோடு இணைந்த 57 Boulevard de Belleville 75011 Paris என்ற முகவரியில் உள்ள ஒப்புரவு அன்னை சிற்றாலயம் (NOTRE DAME RECONCILIATRICE) இலங்கை தமிழ் கத்தோலிக்க மக்களுடைய பாவனைக்கு 31.10.1999 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்நாளே எங்கள் பணியக விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த சிற்றாலயத்தை பெற்றுக் கொண்ட பெருமை அருட்தந்தை மரிய செபஸ்ரியன் அ.ம.தி அடிகளாரையே சாரும். இதற்கென வழி சமைத்தவர் அன்றைய கொங்கூர் புனித சூசையப்பர் ஆலயப் பங்குத்தந்தை பிரான்சிஸ் அடிகளார். இதைப் பெற்றுக்கொண்ட பொழுது இந்த கட்டிடத்தை பராமரிக்கும் முழுப்பொறுப்பையும் பணியகம் ஏற்றுக்கெள்ளும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டு பெற்றுக் கொள்ளப்பட்டது.

இச்சிற்றாலயம் தற்பொழுது புதுப்பொலிவுடன் அழகுற காட்சியளிப்பது ஆன்மீக இயக்குனர்களுடைய முயற்சியாலும் கத்தோலிக்க மக்களுடைய பங்களிப்பாலும் ஆகும் என்று சொன்னால் மிகையாகாது.

நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்பு ஆகியவற்றில் இணைந்து நடத்தல்

"எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் தோழமையும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!"

கிறிஸ்துவில் அன்புமிக்க இறைமக்களே,

பிரான்சு இலங்கை கத்தோலிக்க தமிழ் ஆன்மீக பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

புலம்பெயர்ந்து வாழும் நாம், எமது விசுவாசத்திலும் கலாச்சார விழுமியங்களிலும் வேரூன்றி நிற்க எமது ஆன்மீக பணியகம் வழிகாட்டுகிறது. திருப்பலி திருவழிபாடுகள், ஆன்மீகப் பயிற்சிகள், இளையோர் மற்றும் குடும்ப வழிகாட்டல்கள் ஊடாக கிறிஸ்துவின் அன்பை எமது அன்றாட வாழ்வில் வெளிப்படுத்துவதே எமது தலையாய பணியாகும்.

இவ்விணையத்தளம் எமது சமூகத்தின் விசுவாசப் பயணத்தை இணைக்கும் பாலமாக அமையட்டும். தூய ஒப்புரவு அன்னையின் அருளும், இறைவனின் ஆசீரும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் என்றும் தங்குவதாக.

அன்புடன் கிறிஸ்துவில்,

அருட்பணி. போல் மத்தியூ மதன்ராஜ், OMI ஆன்மீகப் பணியக இயக்குநர் / Aumônier

எமது அருள்பணியாளர்கள்

எமது சமூகத்தை விசுவாசப் பாதையில் வழிநடத்தும் ஆன்மீகத் தந்தையர்களை அறிந்து கொள்ளுங்கள்.

Rev.Fr. Sebamalai Thuram, OMI

1994 - 1997

Rev.Fr. S.Maria Sebastian,OMI

1997 - 2003

Rev.Fr. A.Amalathas, OMI

2003 - 2009

Rev.Fr. Linus Souza, OMI

2009 - 2015

Rev.Fr. J.J.Kamalananthan, OMI

2015 -2019

அருள்பணிப் பேரவை

எமது உள்ளூர் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பங்குச் செயற்பாடுகளை வழிநடத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுநிலையினர்.

பணித்தளம் தலைவர் செயலாளர் பொருளாளர்
Paris Belleville
Charles GEORGES
Christa ALEXANDER
Bernard Rajakaran GEETHAPANKALAM
Garges-Sarcelles
Alex IMMANUEL
Angela JACOB
Xavier SEBASTIAMPILLAI
Chelles
Joseph Nicolas SAVARIMUTTU
Asamtathayalini William REGINALD
Mariya Constantine THRESAMALAR
La Courneuve
Jenn TERRENCE
Rocsan ANTHOIMUTHU
Nesan FRANCIS
Clichy sous-bois
Geetha PONKALAN
Elizabeth MARIASELVADASON
Marilyn DEVAMANOHARAN
Noisy-Champs
Sellathurai Robert GUNASEELAN
Sujatha CONSTANTINE
Jasothathevy ANTHONIPILLAI
Epinay sur Seine
Johnson DANAVE
Jacinthan SANTHA
Mariyadas RASHKIN (Jegan)
La Blanc-Mesnil
George ILAIYATHAMBI
Macy DEVASIKAMANI
Boopalasingam RAMALINGAM
Versailles
Neuilly sur Marne
Selvarathinam
Robert ROSHAN
Jenet THEVANAYAGAM
Argenteuil
Joseph CHRISTY
Vijitha ANTHONY CRUZ MORY
Margaret Ann Kumari SIVANANDAN
Aulnay sous-bois
Mary Emilda BELASCO KUMAR
Mary Sulochana SUSAIPILLAI
Dushyyanthan CHELLATHURAI
Bondy
Thavanayagam Vincent
Stalin JESUTHASAN BALASINGAM
Vijitha ANTON SUTHARSAN
Servan
Ratnadurai CHINNADURAI
Premia JAYASEELAN
Vijayalakshmi ROBERT
Aubervilliers
Justin SANTIAGO
Anton Christy DAVID
Créteil
Sebastian Denis PAVILUPILLAI
Usha KIRUPAKARAN
Anton Kumar THAVITHU
Tours
Stella Joseph
Josani REX JEEVAKUMAR
Jeyalatha PREMAKUMAR
Sénart
Selvyn RAJAKULAKONE
Thomas Anton JEYARAJAH
Dilrukshi REX SUBENDIREN